th
ஏனையவை

நாடாளுமன்ற தேர்தலில் பிள்ளையான், கருணா படுதோல்வி

Share

நாடாளுமன்ற தேர்தலில் பிள்ளையான், கருணா படுதோல்வி

நடைபெற்று முடிந்த பத்தாவது நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இருவரும் படுதோல்வியடைந்துள்ளனர்.

அத்துடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவுத் ,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட சோ. கணேசமூர்த்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

இதேவேளை,  இலங்கை தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், எஸ் ஸ்ரீநேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம் எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் வெற்றி பெற்றுள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...