10 33
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்தைச் சாடும் வேலுகுமார்..!

Share

அநுர அரசாங்கத்தைச் சாடும் வேலுகுமார்..

பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால், இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளதோடு, தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியைக் கூட சந்தோஷமாகக் கொண்டாட முடியாதளவுக்கு பொருளாதாரச் சுமை காணப்படுகின்றது என புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.வேலுகுமார் (M. Velu Kumar) தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் மேலும் கூறுகையில், “ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் போது வழங்கப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு போதாது எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கூறிவந்தனர்.

 

எனவே, அஸ்வெசுமவைவிட அதிக கொடுப்பனவு வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

 

ஆனால். அப்படி எதுவும் நடக்கவில்லை. மக்களின் வாழ்க்கைச் சுமையும் குறையவில்லை. மாறாக நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.

 

இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தீபாவளி பண்டிகை பெருந்தோட்டப் பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால், பொருட்களின் விலைகளைப் பார்க்கும்போது, கொண்டாடுவதை விட்டுவிட்டு திண்டாட வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

 

அதேவேளை, கட்சி தேர்தல் அரசியலைவிட நாடுதான் முக்கியம் என்று தேசிய மக்கள் சக்தியினர் கூறி வந்தனர்.

 

ஆனால், பிரிக்ஸ் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தும் ஜனாதிபதி அநுரகுமார செல்லவில்லை. இதன்மூலம் எமக்கு இராஜதந்திர ரீதியில் கிடைக்கவிருந்த பல நன்மைகள் இல்லாமல் போயுள்ளன.

 

நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால்தான் ஜனாதிபதி செல்லவில்லை என கூறப்படுகிறது. நாட்டைவிட தேர்தல்தான் முக்கியம் எனில் அவர்கள் கூறிய மாற்றம் அதுதானா?

 

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடும் நடைபெற்றது. அதிலும் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. அரச தலைவர்கள் மாநாட்டுக்கு அதிகாரிகளை அனுப்புவதன் மூலம் முழு நன்மையும் கிடைக்கப்பெறப் போவதில்லை.

 

இது தொடர்பில் சிவப்பு தோழர்கள் கூறப்போவது என்ன?” என்றும் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...