4 47
இலங்கைசெய்திகள்

அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அதிகார கோரிக்கை

Share

அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அதிகார கோரிக்கை

அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருபவர்கள் நாட்டை ஆளப் பழக்கப்படாததால், பழைய அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதியொருவர் கோரியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

 

பொதுத் தேர்தலுக்காக இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

 

“ஜனாதிபதியாக பதவியேற்ற குறுகிய காலப்பகுதிக்குள் மக்களின் மிக நெருக்கடியான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது.

 

தற்போது பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது.

 

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காத வாக்காளர்கள் கூட நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்.

 

இவ்வருட பொதுத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அனுபவமிக்க பிரதிநிதிகள் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து அவர்களின் நலனுக்காக உழைத்தவர்களை நாட்டு மக்கள் உறுதியாக நிராகரிப்பார்கள்.

 

புதிதாக நாடாளுமன்றத்திற்கு வந்தவர்கள் நாட்டை ஆளப் பழக்கப்படாததால், முன்னாள் அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோருகிறார்.

 

கடந்த அரசாங்கங்கள் அரசியலை வியாபாரமாக மாற்றியதால், முன்னாள் அரசியல்வாதிகள் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகளை மட்டுமே செய்யப் பழகினர்,

 

எனவே அரசியலுக்குப் பயன்படுத்தப்படும் புதிய குழுவை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.” என்றார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...