Wheat Rava
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

கோதுமை ரவை சலாட்

Share

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி உணவில் கோதுமையை சேர்த்து கொள்வது நல்லது. கோதுமை ரவை வைத்து வெஜிடபிள் சலாட் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – கால் கப்
வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் – தலா ஒன்று
ப்ராக்கோலி – பாதியளவு
தக்காளி – 2
ஒலிவ் ஒயில் – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 2 பல்
எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
வறுத்த பாதாம்பருப்பு – 10
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
ஆரோக்கியமான சாலட் வகைகள்

செய்முறை:

கோதுமை ரவையை நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதை கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.

குடைமிளகாய்களை விதை நீக்கி நான்கு துண்டுகளாக, பெரியதாக நறுக்கிக்கொள்ளவும். ப்ராக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒலிவ் ஒயில் ஊற்றி நறுக்கிய கலர் குடைமிளகாய், பூண்டு, ப்ராக்கோலி ஆகியவற்றை லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும். பிறகு, வதக்கிய குடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். (ப்ராக்கோலியை நறுக்கத் தேவையில்லை).

வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

வேகவைத்த கோதுமை ரவை, காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்துக் கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

இப்போது சுவையான கோதுமை ரவை வெஜிடபிள் சாலட் ரெடி.

குறிப்பு: இந்த சாலட்டில் கோதுமை ரவைக்குப் பதிலாக வேகவைத்த கினுவா என்ற தானியம், அல்லது வேகவைத்த சிறுதானியங்களைச் சேர்க்கலாம்..

#HealthyRecipes

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...