19 16
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர்: வெளியாகிய பெயர் பட்டியல்

Share

ஹமாஸ் அமைப்பின் அடுத்த தலைவர்: வெளியாகிய பெயர் பட்டியல்

யாஹ்வா சின்வாரின் மரணத்திற்கு பின்னர் ஹமாஸின் அடுத்த தலைவர் யார் என்ற சர்வதேசத்தின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமைக்கு தகுதியானவர்களின் பெயர்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது இஸ்ரேலால் கொல்லப்பட்டார்.

மேலும், காசாவில் கடந்த மாதம் 21ஆம் திகதி இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் மற்றுமொரு தலைவரான சின்வார் பலியாகினார்.

இந்நிலையில் தலைவர்களை கொல்வதால் தங்கள் அமைப்பை அழிக்க முடியாது என்று ஹமாஸ் இஸ்ரேலுக்கு கடும் சவாலை விடுத்துள்ளது.

அதன்படி, யாஹ்வா சின்வாரின் இளைய சகோதரர் முகமது சின்வார் தலைவர் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

இவர் ஹமாஸ் ஆயுதப்படைப் பிரிவின் மூத்த கட்டளைத்தளபதிகளில் ஒருவராக தற்போது செய்யப்பட்டு வருகின்றார்.

இவரைத் தவிர்த்து சின்வாரின் வலது கை என கூறப்படும் ஹமாஸ் துணைத் தலைவர் கலீல் அல் ஹய்யா காணப்படுகின்றார்.

கட்டாரில் இடம்பெற்ற அமெரிக்க உள்ளிட்ட நாடுகளால் ஏற்பாடு செய்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஹமாஸ் சார்பில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தியவராக கலீல் அல் ஹய்யா கருதப்படுகின்றார்.

இவர்களை தவிர்த்து 2004 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த காலெத் மஸீல் மற்றும் ஹுஸ்மான் பாத்ரான் என்ற உயர்மட்ட தலைவரும் பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...

Untitled 101
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வத்தளை நாயக்ககந்த பாடசாலையில் புதிய முதல்வர் நியமனத்திற்கு எதிர்ப்பு போராட்டம்!

வத்தளை, நாயக்ககந்த பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க மகளிர் பாடசாலையான பாலிகா மகா வித்தியாலயத்திற்கு (குட்...

Untitled 100
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை: ஈரானின் மஷ்ஹத் நகரில் ரயில் சேவைகள் அதிரடி நிறுத்தம்!

ஈரானின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான மஷ்ஹத்தின் (Mashhad) ஆளுநர், அந்த நகரில் உள்ள...

Untitled 99
செய்திகள்இலங்கை

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலையில் மாற்றம்: தட்டுப்பாடின்றி வழங்க அமைச்சர் உறுதி!

உலகளாவிய சந்தையில் எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் உயர்விற்கு இணையாக, இலங்கையிலும் உள்நாட்டு எரிவாயு விலைகள்...