12 19
இலங்கைசெய்திகள்

பழைய வேட்பு மனுவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்

Share

பழைய வேட்பு மனுவின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்

பழைய வேட்பு மனுவின் பிரகாரமே உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் நிதிநிலைமையைக் கருத்திற் கொண்டு பிற்போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் பொதுத் தேர்தலை அடுத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகின்றது.

முன்னைய வேட்புமனுக்கள் ரத்துச் செய்வது தொடர்பில் நாடாளுமன்றத்திலோ, உச்சநீதிமன்றத்திலோ இதுவரை எந்தவொாு தௌிவான முடிவும் எடுக்கப்படாத நிலையில், பழைய வேட்பு மனுக்களின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்படவுள்ளது.

எனினும் குறித்த வேட்பு மனுவில் உள்ள வேட்பாளரொருவர் மரணித்திருக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக மாத்திரம் வேறு பதிலீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...

eb shok
இலங்கை

மின்சாரம் தாக்கியதில் ஒன்பது மாத குழந்தையின் தாய் பலி.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் கிணற்றில் வீழ்ந்த கோழிக்குஞ்சை மீட்க முற்பட்ட தினேஷ் நேசமலர்...