அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
துருக்கியைச் சேர்ந்த ஹேக்கர்கள் சிலர், டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தை முடக்கியுள்ளனர்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தை இயக்க முற்பட்டபோது, துருக்கியைச் சேர்ந்த ரூட் அயில்டிஸ் குழு உருவாக்கிய வலைப்பக்கம் திறந்துள்ளது.
குறித்த வலைத்தளத்தில் ‘அல்லாவை மறந்தவர்களை போன்று இருக்காதீர்கள், கூட்டணியே அவர்களை மறக்க செய்திருக்கிறது.
இங்கு அவர்கள் உண்மையில் வழிமாறிச் சென்றனர்.’ எனும் வாசகம் பதிவிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த வாசகம் துருக்கி மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.
இணையத்தளத்தை முடக்கியவர்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களுக்கான இணைய முகவரியும் அந்த வலைப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
தற்போது டொனால்ட் ட்ரம்பின் வலைத்தளத்தளம் சீராக இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பல்வேறு அரசியல் தலைவர்களை குறிவைத்து சைபர் தாக்குதல்களை நடாத்திவரும் ரூட்அயில்டிஸ் குழு, முன்னதாக பலமுறை அமெரிக்க அரசியல் தலைவர்களின் இணையத்தளங்களை முடக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment