23 10
இலங்கை

3.5 பில்லியன் ரூபா வற் வரி மோசடி! அர்ஜூன் அலோசியஸின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

Share

3.5 பில்லியன் ரூபா வற் வரி மோசடி! அர்ஜூன் அலோசியஸின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்

தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுவினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(16) மீண்டும் நிராகரித்துள்ளது.

3.5 பில்லியன் பெறுமதியான வற் வரியை செலுத்தத் தவறிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரசிக்ஸாரூக், நீதிமன்றில் வாதங்களை முன்வைத்து, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

எனினும், வழக்கு தொடர்பில் ஆராய்ந்த மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க குறித்த இருவரின் பிணை கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...