12 12
இந்தியாசெய்திகள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மீண்டும் மஹேல ஜெயவர்தன

Share

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மீண்டும் மஹேல ஜெயவர்தன

மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜெயவர்தன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2017 – 2022வரை மஹேல ஜெயவர்த்தன மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவி வகித்தார்.

எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறித்த பதவியில் மார்க் பவுச்சர் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்த்தனவுக்கு இந்த பதவியை வழங்கியுள்ளது.

2022ஆம் ஆண்டில், ஜெயவர்த்தன கிரிக்கெட்டின் உலகளாவிய தலைவரானதுடன் பல்வேறு லீக்குகளில் MIஇன் உலகளாவிய அணிகளின் விரிவாக்கத்தை நிர்வகித்தார்.

இந்நிலையில், மஹேலவின் நியமனத்தை அறிவித்த பின், ​​மும்பை இந்தியன்ஸ் (MI) உரிமையாளரான ஆகாஷ் அம்பானி, “மும்பை இந்தியன்ஸின் தலைமை பயிற்சியாளராக மஹேல மீண்டும் வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் உலகளாவிய அணிகள் எங்கள் சுற்றுச்சூழலுக்குள் அவரின் காலடிகளைக் கண்டறிந்துள்ளதால், அவரை மீண்டும் MIக்கு அழைத்து வந்துள்ளது” என வாழ்த்தியுள்ளார்.

அதேவேளை, மார்க் பவுச்சரை சுட்டிக்காட்டி ”உங்கள் தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி” என மும்பை இந்தியன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...