11 11
இலங்கைசெய்திகள்

விடுமுறை நாட்களில் பேருந்து பருவக்காலச் சீட்டு பயன்பாடு : வெளியான தகவல்

Share

விடுமுறை நாட்களில் பேருந்து பருவக்காலச் சீட்டு பயன்பாடு : வெளியான தகவல்

பாடசாலை மாணவர்கள், தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், மாதாந்த பேருந்து பருவக்கால சீட்டை சனி, ஞாயிறு மற்றும் ஏனைய அனைத்து விடுமுறை நாட்களிலும் பயன்படுத்தி பேருந்துகளில் தடையின்றி பயணிக்க அனுமதிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிப்புரையை போக்குவரத்து அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath), போக்குவரத்து சபைத் தலைவருக்கு முன்வைத்துள்ளார்.

விடுமுறை நாட்களில் மாணவர்கள் மேற்கொள்கின்ற போக்குவரத்தின் பயணத்தில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக கிடைக்கப்பெற்றுள்ள பல முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இதற்கான ஒரு தீர்வாக குறித்த மாதத்திற்கான பருவச் சீட்டைப் பயன்படுத்தி அம்மாதம் முழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்துகளில் பயணிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு போக்குவரத்து சபையின் தலைவருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தோடு, அண்மையில் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்திருந்து.

இந்தநிலையில், அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில், பயணிகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவிடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், அதிக கட்டணம் வசூலிக்கும் மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பேருந்துகள் தொடர்பாக ஆணைக்குழுவின் 1955என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 071 25 95 555 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு முறையிடலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாடசாலை மாணவர்களின் பேருந்து பருவகாலச் சீட்டுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Arrest 13
இலங்கை

இலகுவாக வீடு கட்டிக்கொள்ளலாம் – தவணைமுறையில் பணம் பெற்று பலரிடம் மோசடி செய்த நபர் கைது.

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி...

எல் நினோ
இலங்கை

2027 ஏப்ரல் வரை நீடிக்கவுள்ள எல் நினோ தாக்கம்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின்...

சமிந்த குலரத்ன
இலங்கை

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

சபாநாயகரினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடு தொடர்பில்...

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை

இலங்கை கடற்பரப்பில் 09 இந்திய மீனவர்கள் கைது.

நேற்று இரவு வேளையில், தலைமன்னார் உருமலை முனைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த...