இன்றைய ராசிபலன் : 10 அக்டோபர் 2024 – Daily Horoscope
இன்றைய ராசிபலன் 10.10.2024, குரோதி வருடம் புரட்டாசி 24, வியாழக் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம் ராசியில் ரோகிணி , மிருகசீரிடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலை, வியாபாரம் தொடர்பாக திடீர் பயணம் செல்ல நேரிடும். எந்த காரணமும் இல்லாமல் உங்கள் துணையுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். இன்று விட்டுக் கொடுத்து செல்லவும்.மாணவர்களுக்கு கல்வி தொடர்பான தடைகள் நீங்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். செயலில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கை துணையுடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகளை முடிப்பதில் திட்டமிட்டு செயல்படவும். இன்று உங்களின் நிதி நிலையில் நெருக்கடியைச் சந்திக்க வாய்ப்புள்ளது. வீட்டின் மூத்த உறுப்பினர்களின் உதவியால் குடும்ப பிரச்சினைகள் தீரும். இனிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மனதில் விசித்திரமான உணர்வு ஏற்படும். இதனால் மனதில் அமைதியின்மை காரணமாக, திடமாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். ஆன்மீகம், சமூகப் பணி ஆர்வத்துடன் பங்கேற்பார்கள். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலை சற்று மோசம் அடையும். இன்று வெளி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மாணவர்கள் உயர்கல்வி முன்னேற்றம் ஏற்படும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று சுவாரசியமான நாளாக இருக்கும். உங்கள் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எந்த வேலையிலும் அலைச்சலும், கடின உழைப்பிற்கு பின்னரே வெற்றி அடையும். உங்கள் மனைவியுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று குழந்தையின் எதிர்காலம் தொடர்பான முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பாக உங்களின் கனவுகள் நிறைவேறும். உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகத்துடன் இருப்பீர்கள். உங்களின் முன்னேற்றத்தை கண்டு குடும்பமே மகிழ்ச்சி அடையும். இன்று எதிரிகள் பொறாமைப்படுவார்கள். பணியிடத்தில் கூடுதல் வேலைப்பளு இருக்கும். இன்று மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஏற்றம் தரக்கூடிய நாள். இன்று உங்கள் வேலை, வணிகம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வேண்டிய சூழல் இருக்கும். இன்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்து, பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். இல்லையெனில் உறவில் விரிசல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். உங்களின் மன அழுத்தம் குறையும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் கவலைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. சிறிய தவறுகளுக்கு கூட உங்கள் மீது குற்றம் சுமத்தப்பட வாய்ப்புள்ளது. புத்திசாலித்தனமாக செயல்படுவது நல்லது. பிள்ளைகளின் திருமணம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று குடும்பத்தின் நல்ல ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். பெண்களின் உடல்நிலை சற்று கவலை தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் புத்திசாலித்தனமாக நிதி திட்டமிடல் செய்வது அவசியம். தொழில் தொடர்பான நல்ல லாபம் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். இன்று குடும்ப விஷயங்கள் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் பிரச்சனைகள் தீர சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளிடமிருந்து சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பெற்றோரின் சேவையில் ஈடுபடுவீர்கள். உங்கள் வேலையில் திட்டமிட்டு செயல்பட வெற்றி உண்டாகும். உங்கள் செயலுக்கு குடும்ப உறுப்பினர்களின் உதவி கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் நிதி நிலை அதிகரிக்கும். எந்த முயற்சி செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் சந்தேகமான விஷயத்தில் ஈடுபட வேண்டாம். காதல் வாழ்க்கையில் துணையின் நம்பிக்கை அதிகரிக்கும். வணிகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது சிந்தித்து எடுக்கவும். யாருடைய அழுத்தத்தின் பெயரில் முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் மனக்கசப்பு ஏற்படும். சிலர் வேலை மாற்ற நினைப்பீர்கள். உங்கள் மனைவியுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் முக்கிய விஷயங்களை பேசி தீர்வு காண்பீர்கள். இன்று உங்கள் பேச்சில் கவனம் தேவை. கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.
- 2023 rasi palan
- 2024 rasi palan
- daily rasi palan
- Featured
- indraya rasi palan
- jaya tv daily rasi palan
- mesha raasi palan
- nalaiya rasi palan
- october matha rasi palan 2024
- october month rasi palan 2024
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan 2024
- rasi palan tamil
- rasi palan today
- rasi palan today tamil
- september rasi palan
- shelvi rasi palan
- sun tv rasi palan
- Today Rasi Palan
- today rasi palan in tamil
- vendhar tv daily rasi palan