24 66f8ce3f915ac 4
உலகம்

லண்டனில் இளம்பெண்ணின் ஆவி உலவும் மாளிகையை பார்வையிட அனுமதி

Share

லண்டனில் இளம்பெண்ணின் ஆவி உலவும் மாளிகையை பார்வையிட அனுமதி

லண்டன் – எசெக்ஸில் அமைந்துள்ள ஆவி உலாவுவதாக கருதப்படும் மாளிகையை பார்வையிட பார்வையாளர்களுக்கு தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஹெடிங்காம் மாளிகை (Hedingham Castle) என்னும் அந்த 12ஆம் நூற்றாண்டு கால மாளிகை, Castle Hedingham என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.

18ஆம் நூற்றாண்டில், பொலி மைல்ஸ் (Polly Miles) என்னும் அழகிய இளம்பெண்ணொருத்தி அந்த பகுதியில் வாழ்ந்து வந்துள்ளாள்.

எனினும், அவள் ஒரு சூனியக்காரி என மக்கள் கருதியுள்ளனர்.

அத்துடன், அவளுக்கு ஒரு இரகசிய காதலன் இருப்பதாக மக்கள் கூறிவந்த நிலையில், ஒரு குளிர்கால இரவில், அந்த மாளிகையில் ஒரு விருந்து நடைபெற்றுள்ளது.

திடீரென விருந்திலிருந்து மறைந்துபோன பொலி(Polly Miles) இளவேனிற்காலத்தில், அந்த மாளிகையின் அருகிலுள்ள ஒரு ஓடையில் சடலமாக மிதந்துவருவதை மக்கள் கண்டுள்ளனர்.

அவளுடைய இரகசிய காதலனுடன் அவள் சண்டையிட்டதாகவும், அவன் அவளை நீரில் தள்ளிவிட்டதாக சிலரும், அவள் தண்ணீரில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக சிலரும் கூறியுள்ளனர்.

இதன் பிறகு ஹெடிங்காம் மாளிகைக்குச் செல்லும்போதெல்லாம், அதன் உச்சியில் கருமையான ஒரு நிழலைப் பார்த்ததாக பலர் கூற, அது பொலியின்(Polly Miles) ஆவிதான் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இதையடுத்து, அவள் புதைக்கப்பட்ட இடத்தில், ஒவ்வொரு கிறிஸ்துமஸ் மற்றும் ஹாலோவீன் பண்டிகையின்போதும் மர்மமான முறையில் பூக்கள் தோன்றுவதாக கூறப்படுகிறது.

எனினும், தற்போது அந்த மாளிகையில் திருமணம், விளையாட்டு போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், இம்மாதம், ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதிவரை, அந்த மாளிகையைப் பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு கட்டணமும் அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share

Recent Posts

தொடர்புடையது
world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 47
செய்திகள்உலகம்

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவுக்கு விஜயம்: உறவுகளை வலுப்படுத்த புதிய முயற்சி

பிரித்தானிய நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சி (Labour) மற்றும் கன்சர்வேடிவ் கட்சி (Conservative) ஆகிய இரு...

world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...