லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்ற கனடா நாட்டின் ஒன்றாரியோவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் கில் விசன் என்பவர் ஈக்வடாரின் நாபோவில் தங்கியிருந்தபோது, தனது அறையில் உலகின் கொடிய சிலந்திகளில் ஒன்றாக கருதப்படும் பிரேசிலிய வாண்டரிங் ஸ்பைடர் என்ற சிலந்தியை அவதானித்துள்ளார்.
அந்தக் கொடிய சிலந்தியைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு முன் அதனை புகைப்படம் எடுத்து தனது ருவிட்டரில் ‘தி ஸ்பைடர் ரூம்’ என்ற பெயரில் பகிர்ந்துகொண்டார்.
பிரேசிலிய வான்டரிங் ஸ்பைடர் உலகின் கொடிய சிலந்திகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இவை வாழை இலைகளில் அடிக்கடி காணப்படுகின்றதால், வாழை சிலந்திகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த சிலந்தியின் விஷம் மனிதர்கள் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவுள்ளது.
Leave a comment