24 66fa7503b6ffd
இலங்கைசெய்திகள்

சிறீதரன் – மாவை மற்றும் பல தமிழ் தலைவர்களுடன் இந்தியா முக்கிய கலந்துரையாடல்

Share

சிறீதரன் – மாவை மற்றும் பல தமிழ் தலைவர்களுடன் இந்தியா முக்கிய கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு நிறைவடைந்துள்ளது.

எனினும், அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கூட்டம் நிறைவடைந்தவுடன் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரும் விரைவாக அவ்விடத்தில் இருந்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.

நாட்டில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தக் கலந்துரையாடல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

கொழும்பில் உள்ள இந்த தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.

இந்த சந்திப்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச் செயலாளர் சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், டெலோ அமைப்பினுடைய தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ப்ளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இது அடுத்த தேர்தலில் தமிழ் தரப்பினர் அனைவரையும் இணைத்து களம் காண வைப்பதற்கான முயற்சியாக இருக்கின்றது என அரசியல் பரப்பில் பேசப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் எதிர்வரும் நான்காம் திகதி இலங்கைக்கு ஒரு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமாரதிசநாயக்கவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளது.

முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க புதுடெல்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இந்த நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இந்திய இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின்போது பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...

ordinary
இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்!

  கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இடுப்புப் பகுதியில் இணைந்திருந்த இரட்டையர்களை...