6
இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர பதவியேற்பு

Share

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர பதவியேற்பு

கிழக்கு மாகாணத்தில் என்ன பிரச்சனை உள்ளது என்பது எங்களுக்குத் தெரியும்.30 வருடம் போராட்டம் நடைபெற்றது. இனிமேல் அந்த நிலைமை வரக்கூடாது.

தேசிய ஒற்றுமை இருந்தால் இந்தப்பகுதி, எமது நாடு என்பன செழித்தோங்கும்.

எனவே எமது செயற்பாட்டிற்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும் என இன்றையதினம் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற முன்னாள் துணைவேந்தர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழில் மேற்படி விடயங்களை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண ஆளுனராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் (Trincomalee) உள்ள ஆளுனர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயற்பட்டுள்ள கந்தளாய் அக்ரபோதி வித்தியாலய பழைய மாணவருமாவார்.

பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர (JayanthaLalRatnasekera )நவம்பர் மாதம் 1962 ஆம் ஆண்டு பிறந்தார். மனைவியின் பெயர் மல்லிகா ரத்ணசேகர.இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றார்.

இவர் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017 பெப்ரவரி முதல் நவம்பர் 2023 வரை பணியாற்றியுள்ளார்.

தனது ஆரம்பக் கல்வி கந்தளாயில் உள்ள அக்ரபோதி வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கொழும்பு நாலந்தா கல்லூரியிலும் (1972-1980) கற்றார். அத்துடன் ரஷ்யாவின் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1988 இல் வேதியியலில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

1993 இல் அவர் வேதியியலில் தனது முனைவர் பட்டத்தைப் பெற்றார். 1996 ஆகஸ்ட் மாதம் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக சேர்ந்து 2018 இல் வேதியியலில் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.

மற்றும் 1999 முதல் 2005 வரை பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உபவேந்தராகவும் பணியாற்றினார் 2017 ஜனவரியில் இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

2021 இல் துணைவேந்தர்கள் மற்றும் இயக்குநர்கள் குழுவின் (CVCD) தலைவராக பணியாற்றியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், சுற்றுச்சூழல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல், உயர் கல்வியில் தர உத்தரவாதம் மற்றும் அறிவியல் கல்வி ஆகியவற்றில் அவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் உள்ளன. ரத்னசேகர பல பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளில் ஒரு பயிற்சியாளராகவும் வளவாளராகவும் இருந்துள்ளார்.

அவர் ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என நன்கு அறியப்பட்டவர். குறித்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி எஸ் ரத்நாயக்க , ஆளுனர் செயலக செயலாளர் எல்.பி மதநாயக்க ,மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண திணைக்கள தலைவர்கள் , தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திர மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர (Jayantalal Ratnasekara) நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகிவரும் நிலையில் தற்போது புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் ( Nagalingam Vedanayakan) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி முன்னிலையில் அவர் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்றையதினம் (25) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து பொதுத்தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F6YDhCB6S7vQDq50VYCJH
இலங்கைசெய்திகள்

கடல்வளம் மற்றும் நீரியல் வளங்கள் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அமைச்சர் சந்திரசேகர் உறுதி!

சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமான ‘அக்வா பிளான்ட்...

image eb1947179c
அரசியல்இலங்கைசெய்திகள்

முதல் சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் – நாமல் ராஜபக்ஸ சவால்!

தற்போதைய அரசாங்கத்தை முதல் சந்தர்ப்பத்திலேயே கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

1756946218 Scholarship Examination 2025 Sri Lanka Ada Derana 6
இலங்கைசெய்திகள்

6ஆம் வகுப்பு மாணவர் சேர்கைக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்கான 6ஆம்...

23 63e7213579bd6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். துணைவேந்தர் தெரிவு சர்ச்சை நீங்கியது; 7 விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்க மானியங்கள் ஆணைக்குழு வழிகாட்டல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரிகளையும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்குமாறு, யாழ். பல்கலைக்கழகப்...