2 37
இலங்கை

நாடாளுமன்ற தேர்தல் : வியூகம் வகுக்கும் தமிழ் தேசிய பொது கட்டமைப்பு

Share

நாடாளுமன்ற தேர்தல் : வியூகம் வகுக்கும் தமிழ் தேசிய பொது கட்டமைப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக தமிழ் தேசிய பொது கட்டமைப்பினர் இன்று(26) யாழ்ப்பாணத்தில்(jaffna) கலந்துரையாடியுள்ளனர்.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகள் நேற்று (25) கலந்துரையாடிய நிலையில் இன்று இரண்டாவது கட்டமாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின், பொதுச் செயலாளர் கோவிந்தன் கருணாகரம், ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் க.துளசி, அரியநேத்திரன், அரசியர் ஆய்வாளர்களான ம.நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

unhrc
இலங்கைஅரசியல்செய்திகள்

வெனிசுலாவின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும்: அமெரிக்க நடவடிக்கைக்கு இலங்கை அரசு எதிர்வினை!

வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது விவகாரத்தில் இலங்கை...

MediaFile 5 1
செய்திகள்இலங்கை

உணவுச் சட்டத்தின் புதிய விதிமுறைகள் ஜூலை 1 வரை ஒத்திவைப்பு: சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு!

உணவுச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சில முக்கிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் திகதியை எதிர்வரும் ஜூலை...