14 23
இலங்கைசெய்திகள்

புதிய ஜனாதிபதி அநுரவிடம் மத குருமார்கள் விடுத்துள்ள கோரிக்கை

Share

புதிய ஜனாதிபதி அநுரவிடம் மத குருமார்கள் விடுத்துள்ள கோரிக்கை

புதிய ஜனாதிபதியின் வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும் என மத குருமார்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிற்கு ஆதரவாக இடம்பெற்ற மகிழ்ச்சி கொண்டாட்டங்களின் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய ஜனாதிபதியின் வருகையினால் இந்த நாட்டு மக்கள் சுபிட்சமான ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டும். ஒற்றுமையை பற்றி பிடியுங்கள். ஒற்றுமையின் மூலம் அன்பாக, பண்பாக பாசத்தின் மூலம் பரஸ்பரமாக இருக்க வேண்டும்.

இலங்கை திருநாட்டில் நாம் ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுத்து இருக்கின்றோம். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற அவர் இந்த நாட்டில் இருக்கின்ற எல்லா மக்களுக்கும் சமத்துவமான சேவையினை வழங்க வேண்டும்.

புதிய ஜனாதிபதியின் வருகை நாளே இந்த நாட்டில் இருக்கின்ற எல்லா மக்களும் எல்லாவிதமான சிறப்புகளையும் பெற வேண்டும்.

இவர்கள் செய்கின்ற ஒவ்வொரு சேவையிலும் இறைவனின் திருவருளோடு சிறப்பாக நடைபெற வேண்டும்” என தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...