26 13
இலங்கைசெய்திகள்

உயர் ஊதியத்துடன் 10 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்! முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்

Share

உயர் ஊதியத்துடன் 10 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள்! முன்னெடுக்கப்படவுள்ள திட்டம்

இலங்கையில் அடுத்த ஐந்து வருடங்களுக்கு உயர் ஊதியத்துடனான 10 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

குறிப்­பாக இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வது நான் அதிக முன்­னு­ரிமை அளித்­தி­ருக்கும் விட­யங்­களில் ஒன்­றாகும்.

அதற்­க­மைய அடுத்த 5 வரு­டங்­களில் 100,000 க்கும் மேற்­பட்ட வேலை­வாய்ப்­புக்­களை உரு­வாக்­குவேன் என நான் ஏற்­க­னவே அறிவித்திருக்கின்றேன். அவையனைத்தும் உயர் ஊதியம் வழங்கப்படும் வேலைவாய்ப்புக்களாகவே காணப்படும்.

எமது நாடு தனித்துவத் திறமை வாய்ந்த இளைஞர்களைக் கொண்டிருப்பதுடன், நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமாற்றத்தை முன்னகர்த்திச் செல்வதற்கு அவர்களின் திறமையைப் பயன்படுத்துவதே எனது திட்டமாகும்.

எனது பொருளாதார செயற்றிட்டமானது அதிக வருமானத்தை ஈட்டக்கூடியதும், திறன்மிக்க ஊழியர்களுக்கான உயர் ஊதியத்தை வழங்கக் கூடியதுடமான முக்கிய துறைகளை நவீனமயப்படுத்தல், பொருளாதாரத்தை டிஜிட்டல் மயப்படுத்தல், உயர் பெறுமதியுடைய துறைகளை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றை மைப்படுத்தியதாகவே அமைந்திருக்கின்றது.

அது தொழிற்பயிற்சி மற்றும் தொழிற்துறைக் கேள்விக்கு ஏற்றவாறான கல்வித் திட்டம் என்பனவற்றையும் உள்ளடக்கியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...