23 13
இலங்கைசெய்திகள்

தேசபந்து தென்னகோன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தள்ளுபடி

Share

தேசபந்து தென்னகோன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு தள்ளுபடி

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) பொலிஸ் மா அதிபராக, செயற்படுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் இன்று (18) தள்ளுபடி செய்துள்ளது.

பெல்லன்வில தம்மரதன தேரர், வண.பேராசிரியர் அகலகட சிரிசுமண தேரர் மற்றும் பேராசிரியர் கொட்டபிட்டியே ராகுல ஆகியோர் இந்த இடைக்கால மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த தலையீட்டு மனு, நீதியரசர்களான யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இடையீட்டு மனுவில் உள்ள உள்ளடக்கம் வழக்கை நடத்துவதற்கு போதுமானதாக இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...