4 26
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை தலைவர்களை நம்பி தோல்வியடைந்த இனமே நாம்: சிறீதரன் கவலை

Share

தென்னிலங்கை தலைவர்களை நம்பி தோல்வியடைந்த இனமே நாம்: சிறீதரன் கவலை

நாம் வரலாற்று ரீதியாக தென்னிலங்கை தலைவர்களுக்கு மட்டும் வாக்களித்து தோல்வியையே அடைந்தோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மூளாய் – வேரம் பகுதியில் இடம்பெற்ற தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“நாம் 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து தோல்வியடைந்தோம்.

2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சஜித் பிரேமதாசவை ஆதரித்து தோல்வியடைந்தோம்.

2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அவர் வெற்றியடைந்திருந்தாலும் எமக்கான உரிமைகளை அவர் மீட்டுத் தரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
traffic
இலங்கை

மோசமான சாதனையினை பதிவு செய்தது ஸ்ரீ லங்கா!

  உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeoவின் 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கை இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளது....

k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...