24 66e91df673eb2
சினிமா

தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விஜய்.. இதோ

Share

தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விஜய்.. இதோ

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடல் வெளிவந்தது. தமிழக வெற்றிக்கழகம் கட்சி துவங்கிய 6 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இதுவரை கட்சியின் முதல் மாநாடு நடக்கவில்லை. வருகிற 23ஆம் தேதி முதல் மாநாடு நடக்கவிருந்த நிலையில், அதுவும் தற்போது தள்ளிப்போய்விட்டது.

இதனால் அக்டோபர் 15ஆம் தேதி கட்சியின் முதல் மாநாடு நடக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து கட்சியின் தலைவர் விஜய்யின் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளிவரவில்லை.

இந்த நிலையில் இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள். இதில் பிரதமர் மோடிக்கு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

பெரியாருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதில் “சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர். மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர். சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...