22 11
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் தேர்தலுக்காக 1000இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள்

Share

முல்லைத்தீவில் தேர்தலுக்காக 1000இற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள்

முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1506 அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் ஆணையாளரும் மாவட்ட செயலாளருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (17.09.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வன்னி தேர்தல் தொகுதியின் முல்லைத்தீவு மாவட்டத்திற்குரிய அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் தற்போது நிறைவடைந்திருக்கின்றது.

குறிப்பாக எங்களுடைய மாவட்டத்திலே 86,889 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருக்கிறார்கள். 137 வாக்களிப்பு நிலையங்களிலே வாக்களிக்கின்ற பணி இடம்பெற இருக்கின்றது.

தேர்தல் பணிகளுக்காக சுமார் 1506 அரச அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் பாதுகாப்பு கடமைகளுக்காக சுமார் 500 பொலிஸார் ஈடுபட இருக்கிறார்கள்.

137 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்களிக்கும் பெட்டிகள் 21 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கே அமைக்கப்பட்டிருக்கின்ற 8 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு கணக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது.

தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றவர்கள் தங்களுடைய வாக்காளர் அட்டைகளை கொண்டுவருதல் வேண்டும். இருப்பினும் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிப்பு நிலையங்களில் தங்களுடைய வாக்குகளை அளிக்க முடியும் என்றும் குறி்ப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
10 14
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி: அரசு அதிரடி சிக்கன நடவடிக்கைகள் அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருளாதாரப்...

09 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல மாகாணங்களில் இன்று பிற்பகல் 2:00...

08 14
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் பணத்தில் சொத்துச் சேகரிப்பு: 4 கோடி ரூபாய் பெறுமதியான வீடு மற்றும் சொத்துக்கள் முடக்கம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைச் சேர்த்த குற்றச்சாட்டில், சந்தேகநபர் ஒருவரின்...

05 15
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களுடன் சென்ற 08 பேர் கைது: மவுசாக்கலை சோதனைச் சாவடியில் சிக்கினர்!

புனித சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் என்ற போர்வையில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 8 பேர்...