17 9
இலங்கைசெய்திகள்

அவசர பேச்சுவார்த்தைக்காக கூடுகிறது இலங்கை தமிழரசுக் கட்சி

Share

அவசர பேச்சுவார்த்தைக்காக கூடுகிறது இலங்கை தமிழரசுக் கட்சி

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு நிலைப்பாட்டை  இலங்கை தமிழரசுக் கட்சி வெளியிட்ட பின்னரான மத்திய செயற்குழு கூட்டம் இந்த வாரம் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டமானது எதிர்வரும் 14.09.2024 திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டமானது இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன் வெளியிட்ட கருத்து தொடர்பில் இறுதி நிலைப்பாடு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதன்படி கூட்டத்திற்கு அனைத்து கட்சி அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக  இலங்கை தமிழரசு கட்சி கடந்த முதலாம் திகதி அறிவித்திருந்தது.

இதன்படி தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா. அரியநேத்திரனை போட்டியில் இருந்து விலகுமாறு கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த  அறிவித்தலை அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

எனினும், இது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எந்தவிமான கருத்தையும் வெளிப்படுத்தாத நிலையில் குறித்த கூட்டத்தில் அவரது நிலைப்பாடும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
MediaFile 3
செய்திகள்இலங்கை

களனி கங்கை ஆற்றுப்படுகையில் நீர் மட்டம் உச்சம்: ஹங்வெல்ல பகுதியில் பெரும் வெள்ள அபாயம்!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்ததன் காரணமாக, ஹங்வெல்ல (Hanwella) மற்றும் அதனை...

images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...