29 4
இலங்கைசெய்திகள்

வடக்கு மக்களை கடுமையாக சாடியுள்ள அநுர

Share

வடக்கு மக்களை கடுமையாக சாடியுள்ள அநுர

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி இலட்சக்கணக்கான வாக்குகளால் வெற்றிபெறும் என்பதால், மாற்றத்திற்கு எதிரானவர்கள் என்று உங்களை முத்திரை குத்திக் கொள்ள வேண்டாம் என அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) வடக்கு மக்களுக்கு சற்று காரசாரமாக பேசியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எடுத்த தீர்மானம் தென்னிலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் தீர்மானத்திற்கு எதிரானது.

சுமந்திரன் யாருக்கு எதிராக சஜித் பிரேமதாசவிடம் வாக்கு கேட்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன். இந்த மாற்றத்திற்கு எதிராக தெற்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அணி திரள்கின்றனர்.

சமூகமே ஒரு புதிய மாற்றத்தைக் கோருகிறது. முழு நாட்டிற்கும் ஒரு புதிய மாற்றம் தேவை. அந்த மாற்றத்திற்காக நாம் ஒன்றுபட வேண்டும். தெற்கில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பாகுபாடின்றி மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர்.

இந்த நாட்டிற்கு புதிய மாற்றம் தேவை. பழைய பாதையில் முன்னோக்கிச் செல்ல வடக்கு மக்களை ஆதரிக்க வேண்டுமா? பழைய வீதியை விட்டுவிட்டு புதிய வீதிக்கு ஒன்றுபடுமாறு வடக்கு மக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எனவே, தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு, இந்தப் புதிய மாற்றத்துக்கு எதிரான முடிவாகும். 2010, 2015, 2019 ராஜபக்சேவுக்கு எதிரான முடிவு. ஆனால் 2024 முடிவு மாற்றத்திற்கு எதிரான முடிவு.

இந்த மாற்றத்தை எதிர்க்கும் முடிவை கல்வியாளர்களும், பேராசிரியர்களும் அங்கீகரிக்கிறார்களா? இந்த மாற்றத்தில் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாற்றத்திற்கு எதிராக இருக்காதீர்கள். நான் ஒன்றை மட்டும் கேட்கிறேன், நாட்டில் பெரும்பான்மையான மக்கள் மாற்றத்தை கோரும் போது யாழ்ப்பாணத்தில் உங்களால் மட்டும் எப்படி அந்த மாற்றத்திற்கு எதிராக செயற்பட முடியும்?

ஆனால் இந்த யாழ்ப்பாணம் வெற்றியின் அங்கமாக மாறட்டும். அந்த மகத்தான மாற்றத்தின் எதிர்ப்பாளர்கள் என்று உங்களை முத்திரை குத்திக் கொள்ளாதீர்கள் என்றும் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...