33 9
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு பேரிடி! இன்று முதல் நடைமுறையாகும் திட்டம்

Share

கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு பேரிடி! இன்று முதல் நடைமுறையாகும் திட்டம்

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று (28) முதல் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கமைய ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’ என்ற முறை பின்பற்றப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tran Alas) தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு (27 ) வெளிநாட்டு கடவுச்சீட்டு பெற வந்தவர்கள் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) பிரதான அலுவலகத்தில் காத்திருப்பதையும் காணமுடிந்தது.

இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

“மக்கள் ரொம்ப கஷ்டப்படுறாங்க.. எல்லாலே காசுதான்.. கடையில சாப்பிட்டு குடிக்க வேண்டிம்.. பணமும் முடிந்து விட்டது என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இறுதியாக, பாஸ்போர்ட் பெற மூன்று நாட்கள் வரை ஆகின்றது. டோக்கன் கொடுப்பதாக கூறுகின்றனர் எப்படி என்று தெரியவில்லை. எத்தனை நாட்கள்…? பணமும் முடிந்து விட்டது., இறுதியில் ஒருநாள் சேவை என கூறி 20 ஆயிரம் கேட்கிறார்கள் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் இருப்பதால் கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அண்மையில் அறிவித்தது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அதன் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று (28) முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Rain 1200px 22 10 17
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப்...

1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...