நடிகை சமந்தா விவகாரத்துப் பெற்ற பின்னர், பல்வேறு சர்சையான விமர்சனங்களுக்குள் சிக்கி வருகிறார்.
விவாகரத்துப் பெற்றமைக்கு சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமையே காரணம் என்றும் சில வதந்திகள் பரப்பப்பட்டன.
இவற்றிற்கு அண்மையில் வெளிப்படையான பதிவுவொன்றின் மூலம் சமந்தா முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது சமந்தாவின் ஸ்டைலிஸ்ட், ப்ரீத்தம் ஜூகால்கருடன் சமந்தாவை இணைத்து வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இது தொடர்பில் பதிலளித்துள்ள ரீத்தம் ஜூகால்கர் ‘நான் சமந்தாவை எப்போதும் ஜிஜி என்றுதான் அழைப்பேன்.
வட இந்தியாவில் ஜீஜி என்றால் சகோதரி என்று அர்த்தம். அது மாதிரி உறவில் தான் நாங்கள் இருவரும் பழகினோம். ஆனால் எங்கள் இருவரையும் இணைத்து வதந்திகள் வெளிவந்து கொண்டிருப்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
நாங்கள் இருவரும் எப்படி பழகினோம் என்பது நாகசைதன்யாவுக்கு மிகவும் நன்றாக தெரியும்.
அப்படி இருந்தும் மௌனமாக இருப்பது வருத்தத்தை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment