24 66c9193720015 2
இலங்கை

ஓமந்தை காட்டில் விடுதலைப் புலிகளின் தங்கம்: மீட்க முயன்ற கும்பலில் ஒருவர் கைது

Share

ஓமந்தை காட்டில் விடுதலைப் புலிகளின் தங்கம்: மீட்க முயன்ற கும்பலில் ஒருவர் கைது

வவுனியா (Vavuniya) – ஓமந்தை காட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை மீட்க முயற்சி செய்த குழுவொன்றில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் (22) ஓமந்தை காவல்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார்.

ஓமந்தை காட்டில் ஐந்து பேர் கொண்ட கும்பல் தங்கத்தை எடுப்பதற்காக பள்ளம் தோண்டிக் கொண்டிருந்த போது, காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்த நிலையில், அவர்களில் 4 பேர் காட்டுக்குள் தப்பியோடியுள்ளனர்.

அதனை தொடர்ந்து, ஐந்து பேர் கொண்ட குழுவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து பூமிக்கு அடியில் உள்ள பொருட்களை சோதனை செய்யும் நவீன ஸ்கேனர் மற்றும் சில உபகரணங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இருவர் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கங்கள் இருக்கும் இடத்தை அறிந்திருந்ததாகவும் அதனை எடுப்பதற்கே பள்ளம் தோண்டப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், சந்தேகநபர் ஓமந்தை கிராமத்திற்கு சற்று தொலைவில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் எனவும், வாடகை அடிப்படையில் பள்ளம் தோண்டவும் இடத்தை காண்பிக்கவும் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சந்தேக நபரை வவுனியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...