4 34
உலகம்செய்திகள்

உக்ரைனுடனான எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் ரஸ்யாவின் நட்பு நாடு

Share

உக்ரைனுடனான எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் ரஸ்யாவின் நட்பு நாடு

உக்ரைனுடனான (Ukraine) எல்லை பகுதிகளில் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் (Belarus), பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஸ்யா மீதான தாக்குதல்களை உக்ரைன் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், எந்நேரத்திலும் பெலாரஸுக்கு ஆபத்து ஏற்படலாம் என்னும் நோக்கிலேயே அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதற்கமைய, தனது நாட்டின் ஆயுதப் படைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உக்ரைன் எல்லைக்கு அனுப்பியதாகக் கூறியுள்ளார்.

மேலும், தற்போது படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அந்நாட்டின் தெற்கு எல்லையில் அப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, விமானங்கள், விமானத் தடுப்பு ஏவுகணைகள், தொழில்நுட்ப வீரர்கள் பிரிவு உட்பட ஒரு தாக்குதல் நடந்தால் எதிர்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் தாக்குதலில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காக சுமார் 120,000 வீரர்களை எல்லைக்கு அனுப்பியுள்ளதாக லுகாஷென்கோ குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...

01 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிக விலைக்கு அரிசி விற்பனை: கடை உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) அதிக விலைக்கு உள்நாட்டு கீரி சம்பா அரிசியை...

01 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: சொகுசு வாகனங்கள் இலங்கையில் தரையிறக்கம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

01 25
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியில் பாரிய ஊழல்: அரசுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போர்க்கொடி!

நாட்டில் தற்போது நிலவி வரும் மின்சார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றத்தின் பின்னணியில் பாரிய ஊழல்கள்...