சினிமா

கொட்டுக்காளி படத்தில் சூரியின் நடிப்பு எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ…

Share
10 21 scaled
Share

கொட்டுக்காளி படத்தில் சூரியின் நடிப்பு எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ…

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக திகழ்பவர் தான் நடிகர் சூரி. இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையில் கடின உழைப்பின் காரணமாக புகழின் உச்சியில் காணப்படுகின்றார்.

ஆரம்பத்தில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் ஊடாக நாயகனாக அவதாரம் எடுத்தார். அந்த படத்தில் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நாயகனாக நடிக்க கமிட்டானார்.

அதன்படி சூரியின் நடிப்பில் இறுதியாக வெளியான கருடன் திரைப்படமும் அவருக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை வசூலித்ததோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் சாதனை படைத்திருந்தது.

இதைத் தொடர்ந்து கொட்டுக்காளி படம் அடுத்ததாக வெளிவர உள்ளது. கூழாங்கல் படத்தின் மூலம் இயக்குனரான அறிமுகமான பி .எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க, மலையாள நடிகையான அன்னா பென் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

எதிர்வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். அத்துடன் சமீபத்தில் வெளியான கொட்டுக்காளி படத்தின் ட்டைலரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில், பிரஷ் ஷோவில் கொட்டுக்காளி படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்கள்.

அதன்படி கடுமையான கேரக்டரை ஏற்று நடிப்பதில் சூரியும் கதாநாயகியாக அன்னா பென்னும் சூப்பராக நடித்துள்ளார்கள். நமது சமூகத்தில் பெண்கள் மீதுள்ள ஒடுக்கு முறையை குறித்து இந்த படம் பேசியுள்ளது. மேலும் இயக்குனர் வினோத் ராஜ் இந்த படத்தின் மூலம் உலகத்தர சினிமாவை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்துள்ளார் என விமர்சனங்கள் கூறியுள்ளார்கள்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...