26 8
இலங்கைசெய்திகள்

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள்

Share

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள்

இலங்கைக்கு மேல் பயணிக்கும் சர்வதேச விமானங்கள் மற்றும் இலங்கைக்கு வரும் விமானங்களை கையாளும் இரத்மலானை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தின் இயங்குதளம் திடீரென செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் (14 ஆம் திகதி) முதல் நேற்று காலை (15 ஆம் திகதி) வரையில் சுமார் 12 மணிநேரம் செயலிழந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் நடந்தது இதுவே முதல் முறை என்றும் விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதிகாரிகளால் அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக கையாள முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வி.எச்.எஃப். விமானத்துடன் தொடர்பு கொள்ள 124.9 அதிர்வெண் பயன்படுத்திய போது திடீரென்று அந்த அலைவரிசையின் செயற்பாடுகள் தடைப்பட்டன.

திடீரென செயலிழந்த இரத்மலானை விமான நிலைய இயங்குதளம்: தடுமாறிய அதிகாரிகள் | Aircraft Platform That Has Suddenly Shut Down

இதன் காரணமாக வானில் பறக்கும் விமானங்களுடனான தொடர்புகள் தடைப்பட்டன. கணினியை மீட்டெடுக்க மின்னணு பொறியாளர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர்.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான பிரிவில் உதவி பெற்று இரத்மலானை விமான நிலைய உத்தியோகத்தர்களை கட்டுநாயக்கவிற்கு அனுப்பி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செயலிழந்த விமான அமைப்பை நேற்றைய தினம் (15 ஆம் திகதி) பொறியாளர்கள் மீட்டெடுத்துனர்.

இலங்கை வான்பரப்பிலிருந்து 15000 அடி உயரத்தில் பறக்கும் அனைத்து விமானங்களும் இரத்மலானையில் உள்ள பிரதான வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...