8 15 scaled
சினிமா

கங்குவா படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட்..

Share

கங்குவா படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட்..

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து, தற்போது கங்குவா படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தில் சூர்யா ஏழு வேடங்களில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியானது. மேலும், இந்த படத்தில் பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திர, மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

கங்குவா படம் சுமார் ரூ. 300ல் இருந்து ரூ. 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவரை தயாரிக்கப்பட்ட இந்தியப் படங்களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்களில் ஒன்றாகும் கங்குவா.

இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரையில் வெளிவர உள்ளது. இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் ஒரு பேட்டியில் கங்குவா படத்தின் இயக்குனர் சிவா பிறந்தநாள் அன்று அதாவது ஆகஸ்ட் 12ம் தேதி இந்த படத்தின் ட்ரைலர் வெளிவர உள்ளது என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...