24 3
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியின் தங்க கையிருப்பு தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

மத்திய வங்கியின் தங்க கையிருப்பு தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் (central bank) தங்க கையிருப்பு 35 மில்லியன் டொலர்களில் இருந்து 37 மில்லியன் டொலர்களாக 5.2% அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையின் படி இது தெரியவந்துள்ளது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவு கடந்த ஜூலை மாதம் சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, ஜூன் 2024 இல் 5,654 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு, ஜூலை 2024 இல் 0.1% குறைந்து 5,649 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அத்துடன், உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் 5,574 மில்லியன் டொலர்களாக இருந்தது. இது ஜூன் 2024 இல் பதிவான $5,605 மில்லியனிலிருந்து 0.6% குறைவடைந்துள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 1
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் உடன் அமுலுக்கு!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும்...

25 67923813eda00
இலங்கைசெய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்தப் பெறுபேறுகள் (Re-scrutiny Results) வெளியிடப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம்...

russia cancer vaccine news 2024 12 46d8f70b525bd47d7c40b1fc71788a65 3x2 1
செய்திகள்இலங்கை

ரஷ்ய புற்றுநோய் தடுப்பூசி குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசியான ‘என்டோரோமிக்ஸ்’ (Enteromix), புற்றுநோயைக் குணப்படுத்தும் என்ற தகவலை இலங்கை சுகாதார அதிகாரிகள்...

25 68f3da4a380d9
செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸை வழிநடத்திய மஹ்மூத் அல்-முஹ்தாதி அமெரிக்காவில் கைது!

இஸ்ரேல் மீதான தாக்குதலில் ஹமாஸ்  அமைப்பை வழிநடத்தியவர் எனக் கருதப்படும் மஹ்மூத் அமீன் யாகூப் அல்-முஹ்தாதி...