உலகம்
உக்ரைன் நடத்திய தாக்குதலில் நீரில் மூழ்கிய ரஷ்யாவின் பலம் வாய்ந்த ஆயுதம்
உக்ரைன் நடத்திய தாக்குதலில் நீரில் மூழ்கிய ரஷ்யாவின் பலம் வாய்ந்த ஆயுதம்
கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழித்து இருப்பதாக உக்ரைனிய இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், சனிக்கிழமை Sevastopol துறைமுக நகரில் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பலானது ஏவுகணையால் தாக்கப்பட்ட பிறகு நீரில் மூழ்கியதாக தெரிவித்துள்ளது.
மேலும், தீபகற்பத்தை பாதுகாப்பில் வைத்து இருந்த நான்கு S-400 வான் தடுப்பு சாதனங்களையும் தாக்குதலில் அழித்ததாக உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கு ரஷ்யா பதிலளிக்கவில்லை, ரோஸ்டோவ்-ஆன்-டான்(Rostov-on-Don) என்ற kilo-class தாக்குதல் வகை நீர்மூழ்கி கப்பலானது 2014ஆம் ஆண்டு ஏவப்பட்டது.
அத்துடன் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் கலிபர் கப்பல் ஏவுகணைகளை ஏவக்கூடிய நான்கு நீர்மூழ்கி கப்பல்களில் இதுவும் ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளது.
எனினும் உக்ரைனின் இந்த அறிவிப்புகளுக்கு ரஷ்யா இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.