24 66adc0be21dbe
இலங்கைசெய்திகள்

கொள்கைக்கு முரணாக செயற்பட்ட ரணில்! மொட்டு தரப்பு குற்றச்சாட்டு

Share

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு கொள்கைக்கு முரணாக ரணில் விக்ரமசிங்க செயற்பட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் சூழலை ரணில் விக்ரமசிங்கவே இல்லாதொழித்தார் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை வேட்பாளராகக் களமிறக்கும் தீர்மானம் கட்சி உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் எடுக்கப்பட்டது.

அந்த தீர்மானம் இனி மாற்றம் பெறாது.எமது வேட்பாளரே வெற்றி பெறுவார். மாறுபட்ட அரசியல் கொள்கையுடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாகத் தெரிவு செய்தோம்.

எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டது. ஆனால் கட்சி தீர்மானம் எடுப்பதற்கு முன்னரே ஜனாதிபதி ஒரு குழுவுடன் இணைந்து தீர்மானம் எடுத்துள்ளார்” என்றார்.

 

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...