24 66adbcd458bfb
இலங்கைசெய்திகள்

தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம்: எச்சரிக்கை விடுத்துள்ள ஆணைக்குழு

Share

கடந்த தேர்தல்களில் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான இருபதுக்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் அந்த வாக்களிப்பு நிலையத்தை இரத்துச் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரலாற்றில் இவ்வாறான பிரகடனங்கள் இரத்துச் செய்யப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பீ. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ச, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...