24 669b7a52c2ace
இலங்கைசெய்திகள்

நாட்டை அழித்த பொருளாதார படுகொலையாளிகள்! பாதுகாக்கும் முயற்சியில் ரணில்

Share

நாட்டை அழித்த பொருளாதார படுகொலையாளிகள்! பாதுகாக்கும் முயற்சியில் ரணில்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் தான் ஜனாதிபதி ரணில் செயற்படுகிறார். பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ராஜபக்சர்களுக்கு எதிராக இவர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்(Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தல் தற்போது சூடு பிடித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு ரணில் – ராஜபக்ச அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து சூழ்ச்சி செய்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்த வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் பிற்போட்டது.

படுதோல்வியடைவதை தவிர்ப்பதற்காகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதில்லை. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் அவரது கட்சியின் தவிசாளர் மற்றும் பொதுச்செயலாளர் உட்பட அவரது நண்பர்கள் ஜனாதிபதிக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

இதனால் தான் ஜனாதிபதித் தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்துகிறார்கள். அவ்வாறாயின் ஏன் இவர்கள் கடந்த நாட்களில் ஜனாதிபதியின் பதவி காலம் குறித்து சர்ச்சைகளை ஏற்படுத்தினார்கள்.

இவ்வாறான பின்னணியில் தான் ஜனாதிபதியின் பதவி காலம் குறித்து திருத்த சட்டமூலத்தை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் சூழ்ச்சிக்கு அகப்படாமல் தேர்தல்கள் ஆணைக்குழு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டும்.

எதிர்வரும் வாரம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவிப்பை ஆணைக்குழு விடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் கண்டியில் இடம்பெற்ற கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர், தேசியக் கட்சியுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மேடையில் இருந்துக் கொண்டு அழைப்பு விடுக்கிறார். இவரது கருத்து நகைப்புக்குரியது.

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதியாக போட்டியிட போவதில்லை. இவ்வாறான நிலையில் எமக்கு அழைப்பு விடுக்கிறார். மகிந்தானந்த அளுத்கமவை போன்று ஜனாதிபதி உரையாற்றுவது கவலைக்குரியது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் தான் ஜனாதிபதி செயற்படுகிறார்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ராஜபக்சர்களுக்கு எதிராக இவர் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மாறாக எதிர்க்கட்சித் தலைவர் பாடசாலைகளுக்கு பேரூந்து வழங்குவது பற்றி கேள்வியெழுப்புகிறார்.பொதுஜன பெரமுனவின் ஊழல்வாதிகளின் நிலைக்கு ஜனாதிபதி சென்றுள்ளமை கவலைக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22731289 police
செய்திகள்உலகம்

தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு – 9 பேர் உயிரிழப்பு!

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகருக்கு அருகிலுள்ள பெக்கெர்ஸ்டால் (Bekkersdal) பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்...

IMG 20220401 WA0047
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணக் கொடுப்பனவில் பாரபட்சம்: புத்தளம் – கொழும்பு வீதியை மறித்து முந்தல் மக்கள் போராட்டம்!

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல்...

image 3d037a514a
செய்திகள்இலங்கை

கட்டுநாயக்கவில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: வர்த்தகர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர்...

Shantha Pathmakumara 2024.10.27 1
செய்திகள்அரசியல்இலங்கை

NPP பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மீது தாக்குதல் குற்றச்சாட்டு: பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார மற்றும் அவரது...