2 20 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு தப்பிச் சென்றவர்கள் டுபாயிலும் – பிரான்ஸிலும் மறைந்திருப்பதாக தகவல்

Share

நாட்டை விட்டு தப்பிச் சென்றவர்கள் டுபாயிலும் – பிரான்ஸிலும் மறைந்திருப்பதாக தகவல்

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சுமார் நாற்பது பாதாள உலக குழு செயற்பாட்டாளர்கள் டுபாயிலும், பிரான்ஸின் நான்கு இடங்களிலும் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இவர்களை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இடம்பெறும் 43 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 43 பாதாள உலகக் குழுகள் மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ளதாகவும், அந்த குழுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சுமார் 1091 பாதாள உலகக் குழு செயற்பாட்டாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...