11 5
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெற்றியை தடுக்கவே முடியாது! அடித்துக் கூறும் ஐக்கிய தேசியக் கட்சி

Share

ரணிலின் வெற்றியை தடுக்கவே முடியாது! அடித்துக் கூறும் ஐக்கிய தேசியக் கட்சி

பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) வெற்றி பெறுவதை சஜித், அநுர யாராலும் தடுக்கவே முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய (Saman Ratnapriya) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (16.07.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு ஒரு சிலர் மறைமுகமாகச் செயற்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் வியாபாரி ஒருவரால் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை கேள்விக்குட்படுத்தி, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாகச் செயற்பட்டு, ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதை அமைச்சரவையில் உறுதிப்படுத்தியதுடன், உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை செல்லுபடியற்றதாக நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் தேவையான ஆலாேசனைகளை வழங்கி இருந்தார்.

அதன் பிரகாரம் குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால், குறித்த வழக்கைத் தாக்கல் செய்த நபர், தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஒருவரின் நெருங்கிய நண்பர்.

இதன் மூலம் ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்குச் சதித்திட்டங்களை மேற்கொள்பவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அதேபோன்று, தற்போது மீண்டும் தேர்தலைப் பிற்பாேடும் நோக்கில் சட்டத்தரணி ஒருவரால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறு நாட்டுக்குள் குழப்பகரமான நிலைமை ஒன்றை ஏற்படுத்தி, அதனை ரணில் விக்ரமசிங்கவின் மேல் சுமத்துவதற்கான நடவடிக்கையே இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதைத் தடுப்பதற்கும் அவர் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதற்குமே இவ்வாறான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதனால் ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்கு ரணில் விக்ரமசிங்க உறுதியாக இருக்கின்றார். அவர் தேர்தலில் சுயாதீன வேட்பாளராகப் போட்டியிடுவார்.

அதேபோன்று பெரும்பான்மை வாக்குகளால் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவதை சஜித், அநுர யாராலும் தடுக்கவே முடியாது” என்றார்.

Share
தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...