24 668cbf856ebd8
இலங்கைசெய்திகள்

இலங்கை சிக்காகோவாக மாற்றமடைந்துள்ளது: அத்துருகிரிய தாக்குதலுக்கு கண்டனம்

Share

இலங்கை சிக்காகோவாக மாற்றமடைந்துள்ளது: அத்துருகிரிய தாக்குதலுக்கு கண்டனம்

சிக்காககோவில் போன்று இலங்கையில் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக கடுவெல பதில் நீதவான் பீ.ஜீ.பி. கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் பார்வையிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஓர் ஆபத்தான நிலைமை. பொதுமக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என்பதே இந்த சம்பவத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கும் பொலிஸ் நிலையத்திற்கும் இடையில் ஒரு கிலோ மீற்றர் தூரமே காணப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வந்தார்கள் சுட்டார்கள் சென்றார்கள் என்ற நிலைமை காணப்படுகின்றது.” என்றார்.

சிக்காகோ அதிகளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே பதில் நீதவான் இலங்கையை சிக்காகோவாக ஒப்பீடு செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...

thumbs b c a94ab8674be4fe22452bcaa193945c57
செய்திகள்உலகம்

அமெரிக்க மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.0 ரிக்டர் அளவில் பதிவு – சுனாமி அபாயம் இல்லை!

அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மாநிலமான ஒரிகான் (Oregon) கடற்கரைப் பகுதியில் இன்று (16) அதிகாலை சக்திவாய்ந்த...

Wimal RW 260116
செய்திகள்இலங்கை

விமல், நீங்கள் ஹரிணிக்கு என்ன செய்தீர்கள்?: விமல் வீரவன்சவிடம் தொலைபேசியில் வினவிய ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு திடீர் தொலைபேசி...