1 1 2 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக குவியும் பெருந்தொகையான மக்கள்

Share

யாழில் வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக குவியும் பெருந்தொகையான மக்கள்

யாழ். (Jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக தென்மராட்சி மக்களால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமும் கடை அடைப்பு நடவடிக்கையும் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதேவேளை, பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா சுகவீன விடுமுறையில் இருப்பதாகவும் இன்று வைத்தியசாலைக்கு சேவைக்கு செல்ல போவதில்லை எனவும் தனது முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் மக்கள் அணிதிரண்டு அமைதியான வழியில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு ஆதரவளித்து இன்று (08.07.2024) போராட்டம் முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் காரணமாக நேற்ற இரவு 8 மணியளவிலேயே மேற்படி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

வைத்தியர் அர்ச்சுனாவிற்கான இடமாற்றக் கடிதத்தை இரவு வேளையில் வைத்து வழங்க முற்பட்டமை மற்றும் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டமையினால் சுமார் 400 பொதுமக்கள் ஒன்றுகூடி வைத்தியசாலை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த போராட்டத்துடன் தற்போது கடையடைப்பும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share
தொடர்புடையது
1768544936 MediaFile 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டுபாயில் பிடிபட்ட பாதாள உலகக் கும்பலின் முக்கிய புள்ளிகள் இலங்கை அழைத்து வரப்பட்டனர்: மோசடிப் பெண் ஒருவரும் கைது!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்ட, இலங்கையின் பாதாள உலகக்...

25 6933bb9be63c1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளியின் கோரத்தாண்டவம்: மத்திய மலைநாட்டின் 34% வனப்பகுதிகள் அழிவு!

இலங்கையை அண்மையில் தாக்கிய ‘டிட்வா’ (Didwa) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் மழை மற்றும் மண்சரிவுகளால்,...

actor vijay sethupathi helped a girl for she return tamil nadu
இலங்கைசினிமாபொழுதுபோக்கு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு இன்று 48-வது பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்களும், சொத்து விபரங்களும்!

மக்கள் செல்வன் என ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, இந்தி...

Interpol red notice
செய்திகள்இலங்கை

95 சர்வதேசக் குற்றவாளிகளுக்கு ரெட் நோட்டீஸ்: டுபாயிலிருந்து பிடிபட்ட மூவர் இன்று இலங்கை வருகை!

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள இலங்கையைச் சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களைக் கைது செய்யச் சர்வதேச...