24 668aae2e0fddd 10
இலங்கைசெய்திகள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி தயார் : அங்கஜன் அறிவிப்பு

Share

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி தயார் : அங்கஜன் அறிவிப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Base Hospital) தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவருடைய உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இன்று (07) வெளியிட்ட பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மைய நாட்களாக தொடரும் சிக்கல் நிலை தொடர்பில் தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன்.

வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாததாலும், அதற்கான மின்பிறப்பாக்கிகள் வழங்கப்படாத நிலையாலும் மருத்துவ பயன்பாடுகள் அற்ற நிலையில் காணப்படுவதாக கடந்த நாட்களில் அறிய முடிந்தது.

இத்தகைய சூழலில் குறித்த பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்து வைத்தியர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவருவதன் அவசியத்தையும் உணர்ந்து, இவ்விடயம் தொடர்பில் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன்.

அதன்படி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அரசாங்கத்தால் போதிய மின்பிறப்பாக்கி வசதிகள் வழங்கப்படும்வரை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான மின்பிறப்பாக்கிகளை தற்காலிக ஏற்பாட்டில் பெற்றுக் கொடுக்க அன்பர்கள் சிலர் முன்வந்துள்ளனர்.

இதனூடாக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுகள் உள்ளிட்டவற்றை இயங்குநிலைக்கு கொண்டுவந்து மக்களுக்கான வைத்திய சேவையை வினைத்திறனுடன் வழங்கமுடியும் என கருதுகிறேன்.

எனவே இதுதொடர்பில் வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் ராமநாதன் அர்ச்சுனா (Dr. Ramanathan Archchuna), பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் ஆறுமுகம் (Dr. Ketheswaran Arumugam), வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பி.எஸ்.டி பத்திரண (Dr. VPSD Pathirana), அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆகியோரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்“ என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...