tamilni Recovered scaled
உலகம்செய்திகள்

பாதசாரிகள் மீது வாகனத்துடன் பாய்ந்த சாரதி: பலரை பலி வாங்கிய கொடூரம்

Share

பாதசாரிகள் மீது வாகனத்துடன் பாய்ந்த சாரதி: பலரை பலி வாங்கிய கொடூரம்

தென் கொரியாவில் நடுங்கவைக்கும் வாகன விபத்து ஒன்றை ஏற்படுத்திய சாரதி கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் திங்களன்று இரவு பாதசாரிகள் பலர் சாலையை கடக்க கூட்டமாக காத்திருந்த நிலையில், டாக்ஸி ஒன்று வேகமாக அவர்கள் மீது பாய்ந்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில், அந்த வாகனம் தவறான திசையில் பயணித்துள்ளதும், வேறு இரு கார்கள் மீது மோதியுள்ளதும் தெரிய வந்தது. ஆனால் பாதசாரிகள் மீது மோதிய சம்பவத்தில் 9 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மேலும், சாரதி உட்பட 6 பேர்கள் காயங்களுடன் தப்பினர். அந்த சாரதி சம்பவயிடத்திலேயே கைது செய்யப்பட்டார். மேலும், அந்த சாரதி மது அல்லது போதை மருந்து பயன்படுத்தியதாக சோதனையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக விசாரணையின் போது அந்த சாரதி கூறியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைதாணைக்கு முயன்று வருவதாகவும், அதன் பின்னரே உரிய விசாரணை முன்னெடுக்கப்படும் என்றும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அவர் வாகனமும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சாரதி குறித்த தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்திருந்தாலும், உள்ளூர் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில், அந்த நபர் 60 வயது கடந்தவர் என்றும், பேருந்து சாரதியாக பணியாற்றியவர் என்றும், சாரதியாக 40 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...