tamilni Recovered 2 scaled
இலங்கைசெய்திகள்

சம்பந்தனின் கடந்த காலத்தை நினைவு கூர்ந்த ரணில்

Share

சம்பந்தனின் கடந்த காலத்தை நினைவு கூர்ந்த ரணில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் (R. Sampanthan) எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் மறைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று (02) விசேட உரையொன்றை நிகழ்த்தி இரங்கலைத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் அதற்காக அவர் பல பணிகளை செய்துள்ளதாகவும் அதிபர் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இரா. சம்பந்தனுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம் அவரின் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அதிபர் தெரிவிக்கையில், “நான் இந்த உரையாற்றும் போது, அன்று என்னுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களில் எஞ்சியிருந்த எனது சகாக்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தற்போது எங்களுடன் இல்லை.

நானும் அவரும் மிகவும் கடினமான காலகட்டங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் வழங்கிய பங்களிப்பை நான் அறிவேன்.

அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார்.

ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும் போது “ரணில், நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்” என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார்.

அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என பிரத்தியேகமான நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார்.

அதைப் பற்றி விவாதம் செய்ய அவசியமில்லை. அவர் அதற்கான போதுமான பங்களிப்பை செய்துள்ளார்.

அதனை நிறைவு செய்ய அதிகாரப் பகிர்வு மற்றும் மத்தியில் அதிகாரத்தை குறைப்பது தொடர்பாக இன்னும் சிறிய பணிகளை வேண்டியுள்ளது.

மேலும், அந்த பணிகளை நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த கௌரவாகமாக இருக்கும்“ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...