28 3
உலகம்செய்திகள்

2 இலட்சம் இந்திய கணக்குகள் குறித்து எக்ஸ் தளத்தின் முடிவு

Share

2 இலட்சம் இந்திய கணக்குகள் குறித்து எக்ஸ் தளத்தின் முடிவு

2 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய (India) கணக்குகளை எக்ஸ் (X) தளம் அதிரடியாக நீக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக சித்தரித்து Non – consensual nudity புகைப்படத்தையோ காணொளியையோ பதிவிடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்ட 2,29,925 இந்திய கணக்குகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

மேலும், 967 கணக்குகள் தீவிரவாதத்தை ஊக்குவித்த காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி, 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 17,580 முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சமீபத்தில் ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது.

எனினும், சட்டவிரோதமான வகையிலுள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் எனவும் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...