4 8
இந்தியாஇலங்கைசெய்திகள்

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி: மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா

Share

விமான பயணிக்கு உணவில் காத்திருந்த அதிர்ச்சி: மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா

கடந்த வாரம் ஏர் இந்தியா பெங்களூர்(Bengaluru) – சான் பிரான்சிஸ்கோ(San Francisco) விமானத்தில் பயணித்த ஒருவரின் உணவில் உலோகத் தகடு(blead) ஒன்று காணப்பட்டுள்ளது, அதற்காக ஏர் இந்தியா(Air India) விமான நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இந்த சம்பவம் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான AI 175 விமானத்தில் இடம்பெற்றுள்ளது.

பெங்களூரில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி சென்ற விமானத்தில் குறித்த பயணி பயணித்துள்ளார்.

பயணத்தின் இடையே பயணிக்கு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் உணவு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, வழங்கப்பட்ட உணவில் உலோகத் தகடு ஒன்று இருப்பதை அவர் கண்டறிந்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு ஏர் இந்தியா நிறுவனம்,

“உணவில் உலோகத் தகடு இருப்பதை பயணி கண்டுபிடித்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்பதுடன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனம் இயந்திர கத்திகளை கொண்டு காய்கறிகளை வெட்டும் போது அதில் ஒரு பகுதி உடைந்து விழுந்து இருக்கலாம்” என விளக்கம் அளித்துள்ளது.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...