24 666d32bb2e64d
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை வீடொன்றுக்குள் நடந்த மர்மம் – திடுக்கிடும் தகவல்

Share

தென்னிலங்கை வீடொன்றுக்குள் நடந்த மர்மம் – திடுக்கிடும் தகவல்

மொரகஹஹேன மொரட்டாவாவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் தொன்மைப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தோண்டிய வர்த்தகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, அந்தப் பிரிவினரும் மொரகஹஹேன பொலிஸாரும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடன், தண்ணீர் மோட்டர், 2 கல் நொறுக்கும் இயந்திரங்கள், மண்வெட்டிகள், கம்பி மற்றும் பலி கொடுப்பதற்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

53 வயதான தொழிலதிபர், தனது வீட்டின் குளியலறையின் கழிவு நீரை வெளியேற்றுவதற்காக மேலதிக குழி ஒன்றை வெட்டுவதற்கு உகந்த நேரம் பார்ப்பதற்காக களுத்துறையில் உள்ள பிரபல சோதிடரை சந்தித்துள்ளனர்.

அதனை சோதித்த சோதிடர் குளியலறைக்கு அருகில் உள்ள அறையின் கீழ் பகுதியில் பல தசாப்தங்கள் பழைமையான இரத்தினக் கற்கள் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு கூறியதாக தொழிலதிபரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதற்கு சில சோதிட செயற்பாடுகள் உள்ளதெனவும் அதனை செய்த பிறகு தோண்டுமாறு சோதிடர் கூறியுள்ளார்.

அதற்காக சில எண்ணெய் போத்தல் போன்றவற்றையும் 3000 ரூபாய் பணமும் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொழிலதிபர் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, குளியலறையின் பக்கத்து அறையின் நான்கு மூலைகளிலும் வெற்றிலையில் சில நாணயங்களை வைத்து, அதில் சோதிடர் கொடுத்த சில பானைகள் மற்றும் எண்ணெய் போத்தல்களை இரவும் பகலும் மேலும் இரண்டு பேரும் தோண்டியதாக கூறப்படுகின்றது.

நேற்றிரவு பொலிஸார் குறித்த இரண்டு மாடி வீட்டை சுற்றிவளைத்த போது சந்தேகநபர்கள் மூவரும் அந்த இடத்தில் தோண்டிய நிலையில் கைது செய்துள்ளனர்.

இரண்டு மாடி வீட்டில் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் சில மாதங்களாக வசிப்பதாகவும், பாதுகாப்பற்ற முறையில் எவ்வித பாதுகாப்பு முறைகளையும் பயன்படுத்தாமல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்து தோண்டியிருந்தால் இன்னும் சில நாட்களில் வீடு இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் 27 மற்றும் 53 வயதுடைய ஹொரணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...