2 1
இலங்கைசெய்திகள்

வடக்கு மக்களுக்கு சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை : சஜித் தரப்பு ஆதரவு

Share

வடக்கு மக்களுக்கு சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை : சஜித் தரப்பு ஆதரவு

வடக்கு மக்களுக்கும் இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் சகல வசதிகளையும் அனுபவிப்பதற்கான உரிமை உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்(Saidulla Marikka) தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு மக்களுக்கான வசதிகளை எமது நாட்டு அரசாங்கங்கள் வழங்கவில்லை. ஐ.தே.க. அரசாங்கமோ, பொதுஜன பெரமுன அரசாங்கமோ அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

எனவே தான் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வடக்கிற்கு ஒரு சட்டமும், தெற்கிற்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது என்றும், முழு நாட்டுக்கும் ஒரே சட்டம் என்ற ரீதியில் தமிழ் மக்களுக்கான நியாயத்தை வழங்க வேண்டும் என்று தான் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் போது சமூக பொலிஸ் போன்றவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதில் சிக்கல் இல்லை.

பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளில் பெரும்பாலானவை மாகாணசபைகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சி நிறுவனங்கள் அனைத்தும் கூட மாகாணசபைகளின் கீழேயே உள்ளன.

அவர் கூறியதன் அர்த்தமும் இதுவே. அதனை விடுத்து பொலிஸ் அதிகாரம் முற்றாக வழங்கப்படும் என்பதல்ல. அவ்வாறெனில் தற்போதுள்ளதுடன் சில விடயங்கள் இணையும்.

அந்த வகையில் சமூக பொலிஸ் மற்றும் சுற்றாடல் பொலிஸ் என்பவற்றை வழங்குவதில் சிக்கல் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

ஆனால் நான் இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவரிடம் எதனையும் கேட்கவில்லை. வடக்கு மக்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். வடக்கு மாணவர்களுக்கும் தெற்கிலுள்ள மாணவர்களைப் போன்றே கல்வி கற்பதற்கு உரிமையுள்ளது” என்றார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...