d scaled
செய்திகள்விளையாட்டு

சென்னையை வீழ்த்தி டெல்லி வெற்றிவாகை சூடியது

Share

சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கப்பிடல்ஸ் அணிகளுகிடையில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இன்று இடம்பெற்ற IPL2021ன் 50-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கப்பிடல்ஸ் அணிகள் மோதின . டாஸ் வெற்றி பெற்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்துவீச்சு தேர்வு செய்தார்.

அதை தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்துள்ளது. டு பிளிஸ்சிஸ் 10 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 13 ரன்னிலும், ராபின் உத்தப்பா 19 ரன்களும், மொயீன் அலி 5 ரன்களும் எடுத்தனர். எம்.எஸ். டோனி 18 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு அரை சதமடித்தார்.அவர் 55 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

137 என்ற வெற்றி  இலக்குடன்களமிறங்கிய டெல்லி கப்பிடல்ஸ் அணியின் ஷிகர் தவான் தவிர மற்ற வீரர்கள் அடுத்தடுத்து இலக்குகளை பறிகொடுத்தனர் .தவான் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.அதன்பின் களமிறங்கிய ஹெட்மயர் நிதானமாக துடுப்பாடி 28 ரன்கள் எடுத்து தனதனியை வெற்றி பெற செய்தர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...