24 665cd149f1623
அரசியல்இலங்கைசெய்திகள்

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள்

Share

அரகலயவிற்கு பின் மீண்டும் தலை தூக்கும் ரவுடி அரசியல்வாதிகள்

அரகலய போராட்டத்திற்கு பின் பின்வாங்கிய ஊழல் மற்றும் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை குருநாகலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி இளைஞர் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரகலயத்தின் உண்மையான அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால் மக்கள் எழுச்சியை நிலைநாட்ட வேண்டும்.

2022 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாஷைகளை நிலை நிறுத்தக்கூடிய ஒரே அரசியல் சக்தியும் அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தி மட்டுமே.

அரசியல்வாதிகள் அரகலயவில் இருந்து பாடம் கற்கவில்லை மாறாக போதைக்கு அடிமையானவர்களின் எழுச்சி எனக் கூறி மக்களின் எழுச்சியை அவமானப்படுத்துக்கின்றனர்.

மக்கள், குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல் சக்திகளுடனும் பற்று கொள்ளாமல் பொதுவான அபிலாஷைகளுக்காக வீதியில் இறங்கியதோடு நல்லதொரு அரசியல் நிலைமைக்கான அபிலாஷைகள் அவர்களிடம் உள்ளது.

மோசடி மற்றும் ஊழல் இல்லாத ஒழுக்கமான மற்றும் சட்டபூர்வமான நாட்டை மக்கள் எதிர்பார்த்ததுடன் பொது சமூக நோக்கத்திற்காக வீதியில் இறங்கினர்.

அதை ஆட்சியாளர்கள் உணரவில்லை அத்தோடு அதை அவமானப்படுத்தி போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் விபச்சாரிகள் என தெரிவித்ததோடு இந்த ஆட்சியாளர்கள் கற்கவே இல்லை இவ்வளவு பெரிய எழுச்சியிலிருந்தும் ஒரு பாடம்.

அரசியல் வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கி ஒடுக்கி அரச சொத்துக்களை விற்கத் தொடங்கியும் அரகலயத்தின் பின்னரும் அதே பழைய பாதையிலேயே பயணிக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...