இந்த வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இவ்வார பாராளுமன்ற கூட்டத்தொடர்பில் 2022ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்றைய தினம் வாய்மூல வினாக்களுக்கான விடைகளுக்கு மாத்திரம் இடமளிக்கப்படும்.
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் இதுவரை பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்களுக்கான விசேட அமர்வான இன்றைய தினம் பாராளுமன்றம் கூடுகின்றது.
இதனால் இன்றைய தினம் முழு நாளும் வாய்மூல கேள்விகளுக்கான விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இவ்விசேட அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மாலை 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை நாளை காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment